ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.
Then Kizhakku Cheemayile Lyrics in Tamil
Then Kizhakku Cheemayile Lyrics in Tamil
பெண் : தென்கிழக்கு சீமையிலே
செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு
ஈரமிருக்கு
பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு
கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும்
சாரம் இருக்கு
ஆண் : இவுக பொழப்புக்கு
நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில
மேகம் இருக்கு
ஆண் : தென்கிழக்கு சீமையிலே
செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு
ஈரமிருக்கு
பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு
கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும்
சாரம் இருக்கு.
பெண் : தாய் வீட்டுப் பேரும்
தாய் மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு
சொத்து சுகமே
ஆண் : சீர்கொண்டு வந்தும்
பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும்
சொந்த பந்தமே
பெண் : குத்தந்தான் பார்த்தா
ஊரில் சுத்தம் இல்லையே
ஆண் : கோழிக்கு குஞ்சு மேலே
கோபம் வல்லையே
பெண் : உம்போல அண்ணன் இந்த
ஊரில் இல்லையே
ஆண் : செங்காட்டு மண்ணும்
நம் வீட்டுப் பொண்ணும்
கை விட்டுப் போகக் கண்டா
கண்ணீர் வருமே
பெண் : தங்கச்சி கண்ணில்
கண்ணீரை கண்டா
தன் மானம் கூட அண்ணன்
விட்டுத் தருமே
ஆண் : பந்தத்தை மீறிப் போக
சக்தி இல்லையே
பெண் : பாசத்தை பங்கு போடப்
பட்டா இல்லையே
ஆண் : வேருக்கு இளகிப் போச்சு
வெட்டுப் பாறைய
பெண் : தென்கிழக்கு சீமையிலே
செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு
ஈரமிருக்கு
பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு
கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும்
சாரம் இருக்கு
ஆண் : உலகம் பொய் தானா
உறவும் பொய் தானா
ஓடைக்கு ஓடும் தண்ணீர்
சொந்தமில்லையா
பெண் : சொந்தத்தை யாரும்
சொல்லாமல் போனால்
குந்திக்கும் கர்ணனுக்கும்
பந்தம் இல்லையா
ஆண் : சொந்தத்தை தாரை வார்த்து
தந்தேன் தங்கச்சி
பெண் : சொல்லமல் போனாள் அண்ணே
இந்த ஊமச்சி
ஆண் : உசிரு மட்டும் வெச்சிருக்கேன்
தாரேன் தங்கச்சி
பெண் : தென்கிழக்கு சீமையிலே
செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு
ஈரமிருக்கு
பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு
கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும்
சாரம் இருக்கு
ஆண் : தென்கிழக்கு சீமையிலே
செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு
ஈரமிருக்கு
பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு
கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும்
சாரம் இருக்கு.. ..
Then Kizhakku Cheemayile Lyrics in Tamil