Naan Aval Illai Lyrics in Tamil
நான் அவள் இல்லை நான் அவள் இல்லை
அழகிலும் குணத்திலும் எதிலும்
நான் அவள் இல்லை
உன் மேலே காதல் கொண்டேன்
உன் வானத்தில் ரெண்டாம் நிலவாய்
என்னை பூக்க செய்வாயா
செய்வாயா
அவள் எங்கே விட்டுப் போனாளோ
அங்கே தொடங்கி உன்னை நான்
காதல் செய்வேனே
ஆனால் அன்பே ஆனால் அன்பே
அவளுக்கு கொடுத்த இதயத்திலே
உன்னை வைத்து பார்க்க தயங்குகிறேன்
ஆனால் அன்பே ஆனால் அன்பே
அவள் விட்டுப் பறந்த உயரத்திலே
உன்னோடு பறக்க முயலுகிறேன்
என வானிலே ஓர் முகிலாய்
நீ தோன்றினாய்
மெதுவாக நீ வானமாய்
விரிந்தாயடி என் நெஞ்சிலே
என பூமியில் ஓர் செடியாய்
பூ நீட்டினாய்
மெதுவாக நீ காடென
படர்ந்தாயடி என் நெஞ்சிலே
உன்னாலே விழியோடும் சிரிக்கின்றேன் மீண்டும் இன்று
உன்னாலே எனை மீண்டும் திறந்தேன் பெண்ணே
இருளோடு நேற்றை நான் தேடினேன்
எதிர்கால தீபம் காட்டினாய்
ஆனால் அன்பே ஆனால் அன்பே
அவளுக்கு கொடுத்த இதயத்திலே
உன்னை வைத்து பார்க்க உன்னை வைத்து பார்க்க
வா என்று நான் சொல்லும் முன்பே
என் பிள்ளைக்கு தாயென்று ஆனாயே நீ இன்று
ஏனென்று நான் கேட்கும் முன்னே நீ
என் காதின் ஓரத்தில் முத்தத்தில் சொன்னாயடி
மடி மீது கிடத்தி
தலை கோதினாள்
உன் காதலால் என்
காயம் ஆற்றினாள்
நீதான் அன்பே நீதான் அன்பே
இனி எந்தன் நிலவு இனி எந்தன் உறவு
இனி எந்தன் கனவு
நீதான் அன்பே நீதான் அன்பே
இனி எந்தன் இதயம் இனி எந்தன் பயணம்
இனி எந்தன் உலகம்… ..
Naan Aval Illai Lyrics in Tamil
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.