Vaan Engum Nee Minna Lyrics in Tamil
ஆண் : வான் எங்கும்
நீ மின்ன மின்ன நான்
என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில்
நீ உன்னை ஊற்றினாய் கை
அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்
ஆண் : வான் எங்கும்
நீ மின்ன மின்ன நான்
என்ன நான் என்ன பண்ண
பெண் : என் வானவில்லிலே
நீ நூல் பறிக்கிறாய் அந்நூலிலே
உன் நெஞ்சினை ஏன் கோர்க்க
பார்க்கிறாய்
ஆண் : { ஓ ஓ ப்ரியா
ப்ரியா இதயத்தின்
அதிர்வு நீயா எனது
உணர்வுகள் தவம்
கிடந்ததே தரை வந்த
வரம் நீயா } (2)
ஆண் : பூக்கள் இல்லா
உலகினிலே பூக்கள்
இல்லா உலகினிலே
வாழ்ந்தேனே உன்னைக்
காணும் வரை நான் இன்றோ
பூவுக்குள்ளே சிறை
பெண் வாசம் என் வாழ்வில்
இல்லை என்றேனே உன் வாசம்
நுரை ஈரல் நான் தீண்டக் கண்டேனே
மூச்சும் முட்ட தான் உன் மேல்
காதல் கொண்டேனே
ஆண் : வான் எங்கும்
நீ மின்ன மின்ன நான்
என்ன நான் என்ன பண்ண
பெண் : என் வானவில்லிலே
நீ நூல் பறிக்கிறாய் அந்நூலிலே
உன் நெஞ்சினை ஏன் கோர்க்க
பார்க்கிறாய்
பெண் : பாலை ஒன்றாய்
வறண்டிருந்தேன் நீ காதல்
நதியென வந்தாய் என்
வாழ்வில் பசுமைகள் தந்தாய்
ஓ என் நெஞ்சம் நீர்
என்றால் நீந்தும் மீனா
நீ என் காதல் காடென்றால்
மேயும் மானா நீ எந்த வெட்க
தீயில் குளிர் காயும் ஆணா நீ
ஆண் : வான் எங்கும்
நீ மின்ன மின்ன நான்
என்ன நான் என்ன பண்ண
பெண் : என் வானவில்லிலே
நீ நூல் பறிக்கிறாய் அந்நூலிலே
உன் நெஞ்சினை ஏன் கோர்க்க
பார்க்கிறாய்
ஆண் : { ஓ ஓ ப்ரியா
ப்ரியா இதயத்தின்
அதிர்வு நீயா எனது
உணர்வுகள் தவம்
கிடந்ததே தரை வந்த
வரம் நீயா } (2).. ..
Vaan Engum Nee Minna Lyrics in Tamil
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.