Menu Close

Kaththi Koovudhu Kadhal Lyrics in Tamil – Complex – 2022


Kaththi Koovudhu Kadhal Lyrics in Tamil – Complex – 2022

கத்தி கூவுது காதல்
உனை கட்டி தழுவுது கண்கள்

ஓராண்டு ஒத்திகை பார்த்தேன்
காதல் நான் சொல்ல
ஓர் நொடியில் கனவாய்கலைந்தது
எங்கோ நீ செல்ல

கண்ணீரில் கூட
அன்று ஈரம் இல்லை
காலத்தின் தோழனாக
நானில்லை, ஓஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஊ ஓ ஓ ஊ ஓ

எங்கே நான் போவது
நெஞ்சோடு கேள்விகள்
நஞ்சாகி போனதே
நான் கண்ட கனவுகள்

மண்ணில் ஓர் பொம்மை செய்தே
காதல் பேர் சூட்டினேன்
அந்த பொம்மைக்கு நீதான்
வந்து உயிரூட்டினாய்

காலம் தவறிய பின்னாலே
காதலை சொல்ல வந்தேனே
நேரம் தவறிய ரயிலாக
நீயோ சென்றாயே

பிரிவின் துயரத்தில் வலியோடு
திருவிழா நெரிசலில்… குழந்தை போல்
நீங்கா நினைவில்… தொலைந்தேனே
உன்னால் வாழ்ந்தேனே

பார்க்காத போதும்
பேசாதா போதும்
நம் காதல் நெஞ்சை
தாலாட்டும்
ஓஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஊ ஓ ஓ ஊ ஓ

பாறைக்கு அடியிலே
தேரைகள் வாழுமே
பாரத்தை பாரமாய்
எண்ணாதே தோழனே

புயலில் சாய்ந்தாலும் நாணல்
மீளும் ஒடியாமலே
நதியின் வெள்ளத்தில் மீன்கள்
நீந்தும் ஓயாமலே

ஒற்றை சிறகாய் நின்றேனே
இன்னொரு சிறகாய் சேர்ந்தாயே
ஏனோ பறந்திடும் முன்னாலே
விட்டு சென்றாயே

காலம் வீசிய கல்லாலே
கலங்கிய குளமென ஆனேனே
மீண்டும் உன் முகம் பார்த்தேனே
நதியாய் தெளிந்தேனே

எத்தனை ஊடல்
எத்தனை தேடல்
அத்தனை காதல்
நெஞ்சோடு
ஓஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஊ ஓ ஓ ஊ ஓ
ஓ ஓ ஓ ஓ.. ..

Kaththi Koovudhu Kadhal Song Credits:
Movie: Complex
Director: Mantra Veerapandian
Producer: Lenin Babu
Singers: GV Prakash Kumar & Saindhavi
Music: Karthik Raaja
Lyrics: Gnanakaravel
Star Cast: Venkat Senguttuvan, Ivana, Aradhya
Music Label: Think Music India

Kaththi Koovudhu Kadhal Lyrics in Tamil – Complex – 2022

Like and Share
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe for latest updates

Loading