ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.
Sandali Un Pasathala Lyrics in Tamil
ஆண்: ஏலே ஏ லேலேலே
ஏலே ஏ லேலேலே
ஒத்தப்பனை ஓரத்துல
செத்த நேரம் ஒம்மடியில்
தலை வச்சு சாஞ்சுக்கிறேன்
சங்கதியை சொல்லித் தர்றேன்
வாடி நீ வாடி
ஆண்: பத்துக் கண்ணு பாலத்துல
மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்
பாய்ச்சலோட வாடி புள்ள
கூச்சம் கீச்சம் தேவயில்லை
வாடி நீ வாடி
ஆண்: ஏலே ஏ லேலேலே
ஏலே ஏ லேலேலே
செவ்வெழனி சின்னக் கேணி
ஒன்ன சிறை எடுக்கப்போறேன் வா நீ
பெண்: அய்யய்யோ
என் உசுருக்குள்ள தீயை வச்சான்
அய்யய்யோ
என் மனசுக்குள்ள நோயத் தச்சான்
அய்யய்யோ
ஆண்: சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னாக்கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள
பெண்: அய்யய்யொ
என் வெட்கம் பத்தி வேகிறதே
அய்யய்யோ
என் சமஞ்ச தேகம் சாயிறதே
அய்யய்யோ
ஆண்: அரளி வெதை வாசக்காரி
ஆளைக் கொல்லும் பாசக்காரி
என் ஒடம்பு நெஞ்சைக் கீறி
நீ உள்ளே வந்த கெட்டிக்காரி
ஆண்: அய்யய்யோ
என் இடுப்பு வேட்டி எறங்கிப் போச்சே
அய்யய்யோ
என் மீசை முறுக்கும் மடங்கிப் போச்சே
அய்யய்யோ
பெண்: கல்லுக்குள்ள தேரை போல
கலைஞ்சிருக்கும் தாடிக்குள்ள
ஒளிஞ்சுக்கவா
காலச் சுத்தும் நெழலைப் போல
பொட்டைக்காட்டில் உன்கூடவே
தங்கிடவா
பெண்: அய்யனாரைப் பாத்தாலே
ஒன் நெனப்புதான்டா
அம்மிக்கல்லும் பூப்போல
மாறிப்போச்சே ஏன்டா
நான் வாடாமல்லி
நீ போடா அல்லி
ஆண்: தொரட்டிக் கண்ணு கருவாச்சியே
நீ தொட்டா அருவா கரும்பாகுதே
ஏய் தொரட்டிக் கண்ணு கருவாச்சியே
நீ தொட்டா அருவா கரும்பாகுதே
ஆண்: சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
பெண்: நீ கொன்னாக்கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள.. ..
Sandali Un Pasathala Lyrics in Tamil