Menu Close

Sri Araalakesi Lyrics in Tamil


Sri Araalakesi Lyrics in Tamil

அருளோடு பொருள் தந்து ஆதரிக்கும் அம்மா
அழகான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா
இருள் நீக்கி ஒளிதந்து எமைகாக்கும் அம்மா
இனிதான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா
அவமாயை அகற்றும்நல் அம்பிகையே நீதான்
அழகான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா
நவ இரவில் நாங்கள் கண்டுகளித்திடவே அம்மா
நவரத்ன பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா
நாமகளாய் முதல் மூன்று நாளிரவில் வந்து நற்கல்விகலை யெல்லாம் நல்கிடுவாய் அம்மா

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం
ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి👇

Telegram WhatsApp

இடைமூன்று நாளிரவில் இலக்குமியாய் வந்து
இகபோக செல்வங்களை எமக்களிப்பாய் அம்மா
வெற்றி தரும் செல்வியாய் வீரசுகுமாரியாய்
கடைமூன்று இரவினிலே காட்சி தரும் அம்மா
ஒருபாதி சிவனாக மறுபாதி உமையாக
சிவகாமி தேவி பொன்னூஞ்சல் ஆடு
விண்ணோரும் மண்ணோரும் விரும்பி உனைத்துதிக்க வண்ணமலர் பொன்னூஞ்சல் வந்தாடு அம்மா

பாரிஜாதம் மணக்க பவளக்கொடி ஊஞ்சலிலே
பார்வதியே பாலாம்பா பாங்குடனே ஆடு
நம்புமடியார்கள் வினை நாளும் தீர்ப்பவளே
செம்பவளக்கொடி ஊஞ்சல் தனிலாடு அம்மா
அருட்பெருஞ்ஜோதியே அராளகேசி உமையே ரத்னகிரீசருடன் பொன்னூஞ்சல் ஆடு

Sri Araalakesi Lyrics in Tamil

Like and Share
+1
0
+1
0
+1
0
Share with your friends & family
Posted in Lyrics in Tamil - Devotional Songs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading poll ...

Subscribe for latest updates

Loading