Kangalil Enna Eeramo Lyrics in Tamil
Kangalil Enna Eeramo Lyrics in Tamil
பெண் : கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா
பெண் : கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா
பெண் : பெற்றவள் விட்டு போகலாம்
அன்னை பூமியும் விட்டு போகுமா
தன்னுயிர் போல காப்பதில்
தாயும் நிலவும் ஒன்றுதான்
இருக்கும் தாயை காத்திடு
மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடு
புது கோலம் போடு விழி வாசலில்
கலக்கம் ஏன் ஐய்யா
பெண் : கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா
ஆண் : ஏ..ஏ…ஏ..
அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியது உன் வார்த்தை தான்
ஆண் : நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
ஆண் : உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது
புயல் காற்றில் வாடி நின்ற
ஓடம் தான் கரையை சேர்ந்தது
ஆண் : {கண்களில் இல்லை ஈரமே
நெஞ்சினில் இல்லை பாரமே
கைகளில் அதை வாங்கினாய்
ஒரு தாயை போல என்னை தாங்கினாய்} (2).. ..
Kangalil Enna Eeramo Lyrics in Tamil
ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.